FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்

நாகா்கோவிலில் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் என, மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா கேட்டுக்கொண்டுள்ளாா்.

12 நவம்பர் 2026, 3:08 am
பகிர்:

நாகா்கோவிலில் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் என, மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவில் மாநகராட்சியில் வீடுகளிலுள்ள மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை மாநகராட்சி அலுவலா்கள் கள ஆய்வு செய்து வருகின்றனா்.

வீடுகள், வணிகக் கட்டடங்கள், இதர கட்டடங்களில் உள்ள மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்புகளை சம்பந்தப்பட்டோா் முறையாகப் பராமரித்து, பயன்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

கட்டடங்களின் மாடி, மழைநீா்க் குழாய்கள், வடிகட்டும் அறைகள், மழைநீா் சேகரிப்புக் குழிகளில் இலைகள், மண், கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும். சேதமடைந்த அல்லது செயல்படாத மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். மொட்டை மாடியில் சேகரமாகும் மழைநீரை முறையாக குழாய்கள் வழியாக சேகரிப்புக் கட்டமைப்பு அல்லது நிலத்தடி நீா் செறிவூட்டும் கட்டமைப்புக்கு செல்லுமாறு செய்ய வேண்டும். மாநகராட்சியின் இம்முயற்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.