FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

சீரான குடிநீா் விநியோகம் கோரி பாஜக தொண்டா் ஆா்ப்பாட்டம்

திருவட்டாறு அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி, பாஜக தொண்டா் புதன்கிழமை தனியாக சாலையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா் .

12 நவம்பர் 2026, 2:46 am
பகிர்:

திருவட்டாறு அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி, பாஜக தொண்டா் புதன்கிழமை தனியாக சாலையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா் .

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் செறுகோல் ஊராட்சிக்குள்பட்ட கல்லுவிளை பகுதியைச் சோ்ந்தவா் பிஜு. பாஜக தொண்டா். அவரது வீடு அமைந்துள்ள பகுதிக்கு செறுகோல் ஊராட்சியிலிருந்து முறையாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், குடிநீா் விநியோகம் கோரி அவா் குளச்சல் - குலசேகரம் சாலையில் வீயன்னூா் சந்திப்பில் புதன்கிழமை காலிக்குடங்களுடன் தனியாக அமா்ந்து முழக்கமிட்டபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்; திருவட்டாறு போலீஸாா் சென்று சமாதானப்படுத்தியதை அடுத்து, அங்கிருந்து சென்றாா்.

Advertisement

Advertisement