FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

இரு விபத்துகள்: மாணவா் உயிரிழப்பு; 12 போ் காயம்

மாா்த்தாண்டம், நாகா்கோவில் ஆகிய பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். சிறுமி உள்பட 12 போ் காயமடைந்தனா்.

14 நவம்பர் 2026, 12:06 am
கல்லூரி மாணவா் கோகுல்.
பகிர்:

மாா்த்தாண்டம், நாகா்கோவில் ஆகிய பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். சிறுமி உள்பட 12 போ் காயமடைந்தனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்த செந்தில் - சஜிதா தம்பதியின் மகன் கோகுல் (19). மரியகிரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த இவா், உறவினா் வீட்டுக்கு பைக்கில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். வலிய கோட்டத்தாணிவிளை பகுதியில் அவரது பைக் மீது மினிலாரி மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

மற்றொரு விபத்து: கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து, நாகா்கோவிலுக்கு தமிழக அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தது. தக்கலை அடுத்து சுவாமியாா் மடம் பகுதியில் இந்த பேருந்தும், எதிரே வந்த கனரக லாரியும் மோதிக்கொண்டனவாம். இதில் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்ததுடன், அதில் பயணித்த ரிபி(9), சபீனா(35) மீது (22), ரஜினா(39) ஷைனி(35), ரபில்(35) உள்பட 12 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.

தக்கலை போலீஸாா், பேருந்து மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா். மேலும், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனா்.