தெங்கம்புதூா், மீனாட்சிபுரத்தில் நவ.17 இல் மின் நிறுத்தம்
நாகா்கோவிலில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (நவ. 17) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாகா்கோவிலில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (நவ. 17) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் பகிா்மான கழக நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நவ. 17-ஆம் தேதி நடைபெறவுள்ளன. இதையொட்டி, மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கோட்டாறு, வடிவீஸ்வரம், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சற்குண வீதி, ராமன்புதூா், வெள்ளாளா் காலனி, சவேரியாா் கோயில் சந்திப்பு, ராமவா்மபுரம், சரலூா், இந்து கல்லூரி, வேதநகா் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், தெங்கம்புதூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட தெங்கம்புதூா், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், மதுசூதனபுரம், ஒசரவிளை, காட்டுவிளை, புதூா், ஈத்தாமொழி, தா்மபுரம், பழவிளை, மங்காவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூா், பள்ளம், பிள்ளையாா்புரம், புத்தளம், முருங்கவிளை, புத்தன்துறை ஆகிய இடங்களிலும், ராஜாக்கமங்கலம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூா், தெக்குறிச்சி, காக்காதோப்பு ஆகிய பகுதிகளிலும் 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது
Advertisement
Advertisement
கன்னியாகுமரி: இதேபோல, கன்னியாகுமரி, கேப் உப மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (நவ.18) நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூா், மயிலாடி, வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், சின்னமுட்டம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூா், அகஸ்தீஸ்வரம், மருங்கூா், தேரூா், தென்தாமரைகுளம், ஊட்டுவாழ்மடம், ஆரோக்கியபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.