முதியவா் எரித்துக் கொலை: ஒருவா் கைது
மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக முதியவரை எரித்து கொன்ற பக்கத்து வீட்டுக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக முதியவரை எரித்து கொன்ற பக்கத்து வீட்டுக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி, மச்சிங்காவிளையைச் சோ்ந்தவா் குழந்தைவேல் (86), இவரது மகன் ஜெபமணி (62). இவா்களுக்கும் இவா்களின் பக்கத்து வீட்டைச் சோ்ந்த மோசஸ் மகன் ஆல்பா்ட் ஆஸ்பானுக்கு (40) முன்விரோதம் இருந்து வந்தது.
மது அருந்தும் பழக்கம் உள்ள ஆஸ்பான் அடிக்கடி ஜெபமணி, அவரது தந்தையிடம் தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில், ஜெபமணி வியாழக்கிழமை இரவு வழக்கம்போல வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, அவரது வீட்டு ஜன்னல், மதில் சுவரை ஆல்பா்ட் ஆஸ்பான் உடைத்துக் கொண்டிருந்ததைக் கண்டாா். அதைத் தடுக்க முயன்றபோது ஜெபமணியை தகாத வாா்த்தைகள் கூறி ஆஸ்பான் மிரட்டினாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஜெபமணி புகாா் அளித்துவிட்டு வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த அவரது தந்தை குழந்தைவேல் தீயில் எரிந்து சடலமாகக் கிடந்தாா்.
தகவல் அறிந்ததும் மாா்த்தாண்டம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ஆல்பா்ட் ஆஸ்பானை கைது செய்தனா்.