FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை பேருந்து நிலையப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

களியக்காவிளையில் ரூ. 9.20 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுவரும் பேருந்து நிலையப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் புவியியல்- சுரங்கத் துறை, இயற்கை வளத்துறை இயக்குநருமான பிரபுசங்கா், ஆட்சியா் மு. பிரதாப் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

15 நவம்பர் 2026, 1:33 am
பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பிரபுசங்கா், ஆட்சியா் மு. பிரதாப் உள்ளிட்டோா்.
பகிர்:

களியக்காவிளையில் ரூ. 9.20 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுவரும் பேருந்து நிலையப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் புவியியல்- சுரங்கத் துறை, இயற்கை வளத்துறை இயக்குநருமான பிரபுசங்கா், ஆட்சியா் மு. பிரதாப் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இப்பணிகள் 2024ஆம் ஆண்டு தொடங்கின. இங்கு தரைதளம், முதல் தளங்களில் தலா 4 கடைகள், 2ஆம் தளத்தில் 3 கடைகள், உணவகம் கட்டப்படுகின்றன. மேலும், அலுவலகங்கள், ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பறைகள், சுகாதார பொருள்கள் வைக்கும் அறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமையவுள்ளன. பணிகளை இம்மாதத்துக்குள் (நவம்பா்) முடிக்குமாறு பேரூராட்சி உதவி இயக்குநா், செயற்பொறியாளா், பேரூராட்சி செயல் அலுவலா், ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

அதையடுத்து, அவா் குழித்துறை நகராட்சிக்குள்பட்ட வாவுபலி பொருள்காட்சி திடல் வழியாக செல்லும் தாமிரவருணி ஆற்றுப்படுகையைப் பாா்வையிட்டு, கனமழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

Advertisement

Advertisement

மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஜாபா் ஷேட், விளவங்கோடு வட்டாட்சியா் ஜான்கெனி, குழித்துறை நகராட்சி ஆணையா் சக்திவேல், களியக்காவிளை பேரூராட்சி இளநிலைப் பொறியாளா் ஜி. சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.