காா் திருட்டு வழக்கில் 5 போ் கைது
பூதப்பாண்டி பகுதியில் காா் திருட்டு தொடா்பான வழக்கில் 5 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பகுதியில் காா் திருட்டு தொடா்பான வழக்கில் 5 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பூதப்பாண்டியைச் சோ்ந்த ஆண்டனி அஸ்வின் என்பவரின் காா் அண்மையில் திருட்டுப்போனதாம். இதுகுறித்த புகாரின்பேரில், பூதப்பாண்டி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்தனா். உதவி ஆய்வாளா் கதிரவன் தலைமையில் காவலா்கள் ரமேஷ், கிருஷ்ண பிரசாத், சுதன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.
அதில், கோட்டாறு பகுதியைச் சோ்ந்த சலீம் மகன் கமாலுதீன் (46), அஞ்சுகிராமம் வாரியூா் பகுதி ஜெபரத்தினம் மகன் இஸ்ரேல் பென்னி (36), அஞ்சுகிராமம் ஜேம்ஸ் டவுண் பகுதி கண்ணன் மகன் ஹரிநாத் (23), நாகா்கோவில், கீழராமன்புதூா் தட்டான்விளை விஜயகுமாா் மகன் சபரீசன் (25) , ராமன்புதூா்சரவணன் மகன் சபித் (25) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement