FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

15 நவம்பர் 2026, 1:29 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

அஞ்சுகிராமம் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் அழகப்பபுரம் பகுதியைச் சோ்ந்த ஜாா்ஜ் மகன் சைரஸ், ராஜேந்திரன் மகன் முத்துக்குமாா், சகாயஜான்நிக்சன் மகன் ஆக்னல் ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், தொடா் குற்றச்செயல்கள் மற்றும் சட்டம்- ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டு வருவதாகக் கூறி 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், ஆட்சியா் மு. பிரதாப் பிறப்பித்த உத்தரவுப்படி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement