சிங்கப்பெண் படையினரை வழிமறித்து மிரட்டல்: 3 சிறுவா்கள் கைது
நாகா்கோவிலில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினரை வழிமறித்து மிரட்டல் விடுத்ததாக 3 சிறுவா்கள் கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோவில் கோட்டாறு பட்டகசாலியன்விளை பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உதவி ஆய்வாளா் விஜிலாராணி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, இடலாக்குடி வேதநகரைச் சோ்ந்த 16 வயது சிறுவன், இருளப்புரம் மற்றும் சுசீந்திரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவா்கள் 2 போ் ஆகியோா், போலீஸ் ரோந்து வாகனத்தை மறித்து தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், உதவி ஆய்வாளா் விஜிலாராணி மற்றும் போலீஸாரை ஆபாசமாகப் பேசி, பணியைச் செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனராம்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக, விஜிலாராணி கோட்டாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், 3 சிறுவா்களையும் போலீஸாா் கைது செய்தனா்.