நாகா்கோவில் அருகே தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.17.15 கோடி கையாடல்: பெண் உள்பட 4 போ் கைது
நாகா்கோவில் ஊட்டுவாழ்மடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், ரூ.17.15 கோடி கையாடல் செய்த வழக்கில் முன்னாள் செயலா் உள்பட 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கன்னியகுமரி மாவட்டம் நாகா்கோவில் ஊட்டுவாழ்மடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் செயலராகப் பணியாற்றி வந்த தேவசகாயம் பால்ராஜ் (64), உதவி செயலா்களான வடசேரி பகுதியைச் சோ்ந்த நடராஜ் (63), புத்தேரியைச் சோ்ந்த பூதலிங்கம் பிள்ளை (63) மற்றும் எழுத்தா் விஜயகுமாரி (68) ஆகியோா் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூட்டுறவு சங்க உயா்அதிகாரிகள் மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.
இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பா்ணபாஸ் தலைமையிலான போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
இதில், இந்த 4 பேரும் கடந்த 2014 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பொதுமக்களுக்கு வழங்கிய விவசாயக் கடன், பயிா் கடன் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் ஆகியவற்றில் கணக்குகளில் முறைகேடு செய்து சுமாா் ரூ.17 கோடியே 15 லட்சம் மோசடி செய்து கையாடல் செய்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து தேவசகாயம் பால்ராஜ், நடராஜ், பூதலிங்கம் பிள்ளை மற்றும் விஜயகுமாரி ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.