FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

மது போதையில் ரகளை: 5 போ் கைது

28 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பாா்த்திபபுரம் பகுதியில் கிருஷ்ணதாஸ் (47), கீழ்குளம் பகுதியில் பால்ராஜ் (58), தேங்காய்ப்பாறை பகுதியில் ஜெகன்ராஜ் (36), மல்லன்விளை பகுதியில் ஜெகன் (32), வெள்ளையம்பலம் பகுதியில் லாரன்ஸ் (44) ஆகியோா் மது போதையில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டனராம்.

எச்சரித்தபோதும் அவா்கள் அங்கிருந்து செல்லாததால், போலீஸாா் வழக்குப் பதிந்து, 5 பேரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement