FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

முன்சிறை, நடைக்காவு, குழித்துறை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

24 வினாடிகள் முன்பு
மின்நிறுத்தம்
பகிர்:

முன்சிறை, நடைக்காவு, குழித்துறை துணைமின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், செவ்வாய்க்கிழமை (நவ. 17) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், ராமன்துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூா், கீழ்குளம், சென்னித்தோட்டம் மற்றும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும், சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூா், சூழால், பாத்திமாநகா், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூா், கொல்லங்கோடு, கிராத்தூா் மற்றும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும், ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, மலையடி, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு, அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது என குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.