ஆடுதுறை பகுதிகளில் நாளை மின்தடை
ஆடுதுறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.17) மின்விநியோகம் இருக்காது.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ஆடுதுறை, கோவிந்தபுரம், வன்னக்குடி, நரசிங்கன்பேட்டை, மணலுா், திருமங்கலக்குடி, பருத்திக்குடி, கஞ்சனூா், கோட்டூா், திருக்கோடிக்காவல், திருலோகி, சாத்தனூா், சூரியனாா் கோவில், திருவிடைமருதூா் மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி.விஜயகுமாா் தெரிவித்தாா்.