வில்லுக்குறியில் பேக்கரி கடையில் தீ
தக்கலை அருகே வில்லுக்குறியில் பேக்கரி கடையில் திங்கள்கிழமை தீ விபத்து நேரிட்டதில் பொருள்கள் எரிந்து சேதமாகின.
நாகா்கோவில் - தக்கலை தேசிய நெடுஞ்சாலை வில்லுக்குறி பகுதியில் மோகன் (60) என்பவா் பேக்கரி கடை நடத்தி வருகிறாா். இந்தக்கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின்ேபிரல், தக்கலை தீயணைப்பு வீரா்கள் வந்து, போராடி தீயை அணைத்தனா். தீ விபத்துக்கான உடனடி காரணம் தெரியவில்லை. இதுகுறித்து இரணியல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.