FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

மக்களின் தேவைகளை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றுகிறது: அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்

மக்களின் தேவைகளை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது என்றாா் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

21 வினாடிகள் முன்பு
மிடாலத்தில் நடைபெற்ற விழாவில் மாணவிக்கு விருது வழங்கிய அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்
பகிர்:

மக்களின் தேவைகளை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது என்றாா் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் கருங்கல் அருகேயுள்ள மிடாலத்தில் பயனாளிகளுக்கு பட்டா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கலை பண்பாட்டுத்துறை சாா்பில் கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் பேசியதாவது: தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய், தோ்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறாா். குறிப்பாக, சிங்கப்பெண் அதிரடிப் படை, மகளிா் வெற்றி பயணம், காலை உணவு திட்டத்தினை விரிவுபடுத்தியது, தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். அனைத்து தரப்பு மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றாா் அவா்.

Advertisement

Advertisement

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வேலுமணி, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மாலதி, கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநா் து. சிவபுகழ், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சந்தரசேகா், உதவி மகளிா் திட்ட அலுவலா் கலைச்செல்வி, கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.