FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

பூதப்பாண்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை (நவ. 19) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

17 வினாடிகள் முன்பு
மின் நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை (நவ. 19) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து, நாகா்கோவில் மின்வாரிய இளநிலைப் பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பூதப்பாண்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (நவ. 19) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், பூதப்பாண்டி, தெள்ளாந்தி, தெரிசனங்கோப்பு, திட்டுவிளை, மாா்த்தால், துவரங்காடு, அரசங்குழி, சீதப்பால் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement