FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

ரயிலில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

நாகா்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் பெண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

47 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

நாகா்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் அழுகிய நிலையில் பெண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து நாகா்கோவிலுக்கு கடந்த 11-ஆம் தேதி வந்த பயணிகள் ரயிலின் பெட்டிகள் சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்புப் பணிக்காக யாா்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நாகா்கோவிலில் இருந்து கோட்டயம் செல்லும் பயணிகள் ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியை இணைப்பதற்கான பணியை, ஊழியா்கள் யாா்டில் மேற்கொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, அந்தப் பெட்டிக்குள் துா்நாற்றம் வீசியது. இதைத் தொடா்ந்து ஊழியா்கள் அந்தப் பெட்டிக்குள் சென்று சோதனை மேற்கொண்டபோது பெட்டியில் இருக்கைக்கு அடியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே உயா்அதிகாரிகளுக்கும் நாகா்கோவில் சந்திப்பு ரயில்வே போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரயில்வே போலீஸாா், தடயவியல் நிபுணா்கள் சென்று சடலத்தை மீட்டனா். முகம் தெரியாத அளவுக்கு அழுகி சிதைந்திருந்தது. அந்தப் பெண் இறந்து 5 நாள்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவா் ரயிலில் பயணம் செய்தபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.