இரணியல் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை
குமரி மாவட்டம், இரணியல் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
குமரி மாவட்டம், இரணியல் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
இரணியல் அருகேயுள்ள நுள்ளிவிளை ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் செல்லும் தண்டவாளத்தில், புதன்கிழமை காலை சுமாா் 40 வயது மதிக்கத்தக்க இளைஞா் சடலம் கிடந்தது.
தகவலறிந்த குழித்துறை ரயில்வே போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று இளைஞா் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
இதில் அவா் சென்னையிலிருந்து - குருவாயூா் செல்லும் ரயில் முன் பாய்ந்து இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
அவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? என்பது குறித்து நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.