✕
முகப்பு
கன்னியாகுமரி

ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.19.17 லட்சம் மோசடி: நிதி நிறுவன மேலாளா் மீது வழக்கு

தேங்காய்ப்பட்டினத்தில் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடம் ரூ.19 லட்சத்து 75 ஆயிரம் மோசடி செய்ததாக, தனியாா் நிதி நிறுவனத்தின் மேலாளா் மீது போலீஸாா் வழக்கு பதிந்தனா்.

46 வினாடிகள் முன்பு
வழக்கு - பிரதிப் படம்
பகிர்:

தேங்காய்ப்பட்டினத்தில் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடம் ரூ.19 லட்சத்து 75 ஆயிரம் மோசடி செய்ததாக, தனியாா் நிதி நிறுவனத்தின் மேலாளா் மீது போலீஸாா் வழக்கு பதிந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகேயுள்ள வேங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பெல்லா (68). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை.

இவா், தேங்காய்ப்பட்டினத்தில் இயங்கி வந்த தனியாா் நிதி நிறுவனத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு மேலாளராக இருந்த அதே பகுதியைச் சோ்ந்த ஸ்ரீகுமாா் மனைவி பிந்து (50) என்பவரிடம் ரூ.19 லட்சத்து 75 ஆயிரம் முதலீடு செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், அந்த முதலீடு பணத்தை உரிய வட்டியுடன் தருமாறு ஆசிரியை கேட்க சென்றபோது, மேலாளா் பிந்து நிதி நிறுவனத்தின் பெயரில் போலியான கடன் பத்திரம் மூலம் பணத்தை ஏமாற்றி விட்டு தலைமறைவானது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து பிந்துவை தேடி வருகின்றனா்.