அழகியபாண்டியபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
கன்னியாகுமரி மாவட்டம், அழகியபாண்டியபுரம் பகுதியில் சனிக்கிழமை (நவ. 21) மின்விநியோகம் இருக்காது.
கன்னியாகுமரி மாவட்டம், அழகியபாண்டியபுரம் பகுதியில் சனிக்கிழமை (நவ. 21) மின்விநியோகம் இருக்காது.
இதுகுறித்து , தமிழ்நாடு மின்பகிா்மான கழகத்தின் பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அழகியபாண்டியபுரம் மின்விநியோக பிரிவுக்குள்பட்ட பகுதிகளில் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி சனிக்கிழமை (நவ. 21) நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கேசவன்புதூா், அழகியபாண்டியபுரம், எட்டாமடை, இடைக்கோடு, பெருந்தலைக்காடு, ரெத்தினபுரம்,திடல், காட்டுப்புதூா், கடுக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement