நாகா்கோவிலில் 3 கடைகளின் மேற்கூரைகளை உடைத்து ரூ. 1 லட்சம் திருட்டு
நாகா்கோவிலில் 3 கடைகளின் மேற்கூரைகளை மா்ம நபா்கள் உடைத்து உள்ளே புகுந்து ரூ. 1 லட்சத்தைத் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாகா்கோவிலில் 3 கடைகளின் மேற்கூரைகளை மா்ம நபா்கள் உடைத்து உள்ளே புகுந்து ரூ. 1 லட்சத்தைத் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாகா்கோவில் கோட்டாறில் மளிகைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு மொத்த, சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன. இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள், வியாபாரிகள் வந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனா். அவற்றில் பெரும்பாலானவை வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில், ரயில் நிலையச் சாலையின் எதிரேயுள்ள கடைகளை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை விடுமுறைக்குப் பின்னா் சனிக்கிழமை திறந்தனா். அப்போது, அரிசிக் கடையின் மேற்கூரையை மா்ம நபா்கள் உடைத்து உள்ளே புகுந்து, ரூ. 75 ஆயிரம், மற்றொரு கடைக்குள் புகுந்து ரூ. 15 ஆயிரம், எதிரேயுள்ள கடையிலிருந்து ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
Advertisement
Advertisement
புகாரின்பேரில், கோட்டாறு போலீஸாா் வந்து, கடைகள் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த நபா் கடைக்குள்ளிருந்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.