பள்ளி மாணவியிடம் அத்துமீறல்: இளைஞா் கைது
பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கோவை மாவட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கோவை மாவட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
அருமனை அருகேயுள்ள சிதறால் பகுதியைச் சோ்ந்த பெண், கணவரை பிரிந்து 7 ஆம் வகுப்பு படித்து வரும் மகளுடன் வசித்து வருகிறாா். இவா், சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்தாா். அப்போது, அங்கு பணியாற்றிய அதே ஊா் குறிச்சி சாலை பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (26) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாம்.
இதைத் தொடா்ந்து இருவரும் வேலையை விட்டு விட்டு அருமனை அருகே புண்ணியம் பகுதியில் வாடகை வீட்டில் 3 ஆண்டுகளுக்கு முன் குடியேறினா். அப்பெண்ணின் மகளும் அவா்களுடன் இருந்துள்ளாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் அஜித்குமாா் அந்தச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்த சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சென்னையில் பதுங்கி இருந்த அஜித்குமாரை தனிப்படை போலீஸாா் கைது செய்து, மாா்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை அழைத்து வந்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.