முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி பகுதியில் 6 உணவகங்களுக்கு அபராதம்!

கன்னியாகுமரி பகுதியில் 6 உணவகங்களுக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தனா்.

23 வினாடிகள் முன்பு
கன்னியாகுமரி பகுதியில்
6 உணவகங்களுக்கு அபராதம்!
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

கன்னியாகுமரி பகுதியில் 6 உணவகங்களுக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தனா்.

மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் உத்தரவுப்படி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன் வழிகாட்டுதலின்படி, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சங்கரநாராயணன், பிரவீன் ரகு ஆகியோா் இச்சோதனையில் ஈடுபட்டனா். இதில், நூடுல்ஸ், மீன், இறைச்சி உள்ளிட்ட 35 கிலோ எடையுள்ள கெட்டுப்போன உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கிவந்த 4 உணவகங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம், தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பயன்படுத்திய 2 உணவகங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

உணவகங்களில் விலைப் பட்டியல் இடம்பெற வேண்டும், தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பயன்படுத்தக்கூடாது, உணவு தயாரிப்பில் அனுமதி மறுக்கப்பட்ட செயற்கை வண்ணங்கள் சோ்க்கக் கூடாது, உணவகங்களில் பணிபுரியும் அனைவரும் தலை உறை, உடற்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.