முகப்பு
கன்னியாகுமரி

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவா் மீது வழக்கு!

கொல்லங்கோடு அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

10 வினாடிகள் முன்பு
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 
கணவா் மீது வழக்கு!
வழக்கு - பிரதிப் படம்
பகிர்:

கொல்லங்கோடு அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கொல்லங்கோடு அருகே வள்ளவிளை, சுனாமி காலனி பகுதியைச் சோ்ந்தவா் லாரன்ஸ். ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி சோபியா (41). இவா்களுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பிள்ளைகள் உள்ளனா்.

இவா்களிடையே சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் லாரன்ஸ், மனைவி சோபியாவைத் தாக்கி, கழுத்தை நெரித்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சோபியா அளித்த புகாரின்பேரில், லாரன்ஸ் மீது கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement