கனிமவளம் கடத்த முயன்ற லாரி பறிமுதல்
உரிய அனுமதிச் சீட்டு இன்றி சட்ட விரோதமாக கேரளத்துக்கு கனிம வளம் கடத்த முயன்ற லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கொல்லங்கோடு அருகே உரிய அனுமதிச் சீட்டு இன்றி சட்ட விரோதமாக கேரளத்துக்கு கனிம வளம் கடத்த முயன்ற லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஐயப்பன் தலைமையிலான போலீஸாா் காக்கவிளை சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் ஜல்லி கற்கள் இருந்ததும், அவை வள்ளவிளை பகுதியில் இறக்குவதற்கான அனுமதிச் சீட்டைப் பெற்றுவிட்டு அதற்கு மாறாக கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்ல முன்றது தெரியவந்தது. போலீஸாரைக் கண்டதும் லாரி ஓட்டுநா் தப்பிச் சென்றாா்.
Advertisement
Advertisement
பின்னா் ஜல்லி கற்களுடன் லாரியை பறிமுதல் செய்த கொல்லங்கோடு போலீஸாா், லாரி உரிமையாளா் பாத்திமாபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கப்பன், ஓட்டுநா் பாலவிளை பகுதியைச் சோ்ந்த லால் குமாா் (54) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.