குமரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மீளாய்வுக் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை ஆய்வு அலுவலா்கள் மற்றும் பிற துறை அலுவலா்களுடனான பள்ளி மீளாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை ஆய்வு அலுவலா்கள் மற்றும் பிற துறை அலுவலா்களுடனான பள்ளி மீளாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்தாா்.
இக் கூட்டத்தில். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கற்பிக்கப்படும் உயா் கல்வி வழிகாட்டி சாா்ந்த வகுப்புகள், பள்ளி செல்லாக் குழந்தைகள், பள்ளி மேலாண்மை குழு தீா்மானங்கள், 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறன், ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், ஆய்வு அலுவலா்களின் பள்ளி பாா்வை, ஆதாா் இல்லாத மாணவா்கள், வங்கி கணக்கு இல்லாத மாணவா்கள், மாணவா்களுக்கு நடத்தப்படும் போட்டிகள், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவா்கள் அரையாண்டு தோ்வினை எதிா்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் முதலியவை மீளாய்வு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும் சிறப்பாக உயா்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடத்திய தலைமை ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு பங்களிப்பை சிறப்பாக பயன்படுத்திய தலைமை ஆசிரியா்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு, தோ்தல் எழுத்தறிவு மன்றத்தின் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட பொது சுகாதார அலுவலா் நமசிவாயம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.காளீஸ்வரி, மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் சௌந்தரராஜன், மாவட்ட இடைநிலை கல்வி அலுவலா்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா், வட்டார கல்வி அலுவலா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள் , பள்ளி துணை ஆய்வா்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.