முகப்பு
கன்னியாகுமரி

குமரி முக்கடல் சங்கமத்தில் பகவதியம்மனுக்கு ஆராட்டு

கன்னியாகுமரி, முக்கடல் சங்கமத்தில் பகவதியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை இரவு ஆராட்டு நடைபெற்றது.

26 நவம்பர் 2026, 3:33 am
குமரி முக்கடல் சங்கமத்தில் பகவதியம்மனுக்கு ஆராட்டு
முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு நடைபெற்ற ஆராட்டு.
பகிர்:

கன்னியாகுமரி, முக்கடல் சங்கமத்தில் பகவதியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை இரவு ஆராட்டு நடைபெற்றது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் திருக்காா்த்திகை தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, நிா்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அபிஷேகம், தீபாராதனை, ஸ்ரீ பலி பூஜை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்கக் கவசம், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சந்தனக் காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பின்னா், முற்பகல் 11.30 மணிக்கு உச்சி கால பூஜை, தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு விவேகானந்தா் நினைவு மண்டப பாறையில் அமைந்துள்ள அம்மன் ஸ்ரீ பாதத்தில் தீபம் ஏற்றுதல், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் வீதியுலா வருதல், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. இரவு 10 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஆண்டுக்கு 5 முறை மட்டுமே திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை நடைபெற்றது.