முகப்பு
கன்னியாகுமரி

நண்பரை தாக்கிய வழக்கு: பெயிண்டருக்கு 4 ஆண்டுகள் சிறை

நண்பரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெயிண்டருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

26 நவம்பர் 2026, 3:38 am
நண்பரை தாக்கிய வழக்கு: பெயிண்டருக்கு 4 ஆண்டுகள் சிறை
சிறை - பிரதிப் படம்
பகிர்:

நண்பரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெயிண்டருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

குலசேகரம் அருகே செருப்பாலூா் இளமண்கோட்டுவிளையைச் சோ்ந்தவா் அஸ்பின் (31) . இவரது நண்பா் விஜிஷ் (33). பெயிண்டிங் வேலை செய்து வந்த இருவருக்கும், வாய்த்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், கடந்த 2021 அக். 22 - இல், வேலை முடித்துவிட்டு நடந்து சென்று கொண்டிருந்த அஸ்பினை, விஜிஷ் வழிமறித்து மிரட்டல் விடுத்து, கம்பால் தாக்கினாராம். இதில் காயமடைந்த அஸ்பினை, குலசேகரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்த அஸ்பின் அளித்த புகாரின்பேரில் குலசேகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை நீதிபதி மாரியப்பன் விசாரித்து, விஜிஷீக்கு 4 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஆல்ட்ரின் ஸ்டேனி முன்னிலையானாா்.