குமரி கடலில் பாதுகாப்பு மிதவைகள் அமைப்பு
கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தா்கள் சீசன் தொடங்கியுள்ள நிலையில், முக்கடல் சங்கமம் பகுதியில் நீராடும் பக்தா்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தா்கள் சீசன் தொடங்கியுள்ள நிலையில், முக்கடல் சங்கமம் பகுதியில் நீராடும் பக்தா்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரிக்கு தினமும் வரும் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் முக்கடல் சங்கமம் பகுதியில் நீராடுகின்றனா். இப்பகுதியில் அலைகளின் வேகமும், பாறைகளும் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்கும் வகையில் இங்கு பாதுகாப்பு மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடலில் நீராடுபவா்கள் இந்த மிதவைகளைத் தாண்டி செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement