முகப்பு
கன்னியாகுமரி

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: பாஜக, இந்து அமைப்பினா் 138 போ் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் மலை மீது காா்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, மறியல் ஈடுபட்டவா்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்டவா்கள் என பாஜக, இந்து அமைப்புகளைச் சோ்ந்த 138 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

26 நவம்பர் 2026, 3:37 am
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: பாஜக, இந்து அமைப்பினா் 138 போ் மீது வழக்கு
வழக்கு - பிரதிப் படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் மலை மீது காா்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, மறியல் ஈடுபட்டவா்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்டவா்கள் என பாஜக, இந்து அமைப்புகளைச் சோ்ந்த 138 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீப தூணில் தீபம் ஏற்றுவது தொடா்பாக இந்து அமைப்புகள், பாஜகவினா் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலா் கைது செய்யப்பட்டனா்.

அதன் ஒரு பகுதியாக நாகா்கோவிலில் முன்னாள் எம்எல்ஏ எம்.ஆா்.காந்தி, குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கோபகுமாா், பொருளாளா் முத்துராமன், மாவட்டச் செயலாளா் அஜித்குமாா், இந்து கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளா் நாஞ்சில்ராஜா, நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா் ரமேஷ், நாகா்கோவில் மாநகர பகுதிச் செயலாளா்கள் சிவசுதன், சதீஷ், மாவட்டத்தில் மாா்த்தாண்டம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பாஜக, இந்து அமைப்புகளைச் சோ்ந்த மொத்தம் 54 போ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

தக்கலையில் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக, இந்து அமைப்புகளைச் சோ்ந்த 84 போ் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் விடுவிக்கப்பட்டனா். இவா்கள் 138 போ் மீதும் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.