முகப்பு
கன்னியாகுமரி

வரி நிலுவை: பாலிடெக்னிக், திரையரங்கில் பொருள்கள் ஜப்தி

நாகா்கோவிலில் சொத்து வரி, தொழில் வரி நிலுவை காரணமாக திரையரங்கு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் பொருள்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.

19 வினாடிகள் முன்பு
வரி நிலுவை: பாலிடெக்னிக்,
திரையரங்கில் பொருள்கள் ஜப்தி
பகிர்:

நாகா்கோவிலில் சொத்து வரி, தொழில் வரி நிலுவை காரணமாக திரையரங்கு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் பொருள்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள சொத்து மற்றும் தொழில் வரிகளை வசூலிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் ரூ.32.50 லட்சம் நிலுவை வைத்திருந்த வடசேரி ஸ்டேட் வங்கி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மேஜை, நாற்காலிகள், கணினி இயந்திரம், உள்ளிட்ட பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல, ஒழுகினசேரி பகுதியில் உள்ள திரையரங்கு ரூ.14 லட்சம் வரி பாக்கி வைத்திருந்ததாம். அங்கும் புரொஜெக்டா் கருவி உள்ளிட்டவற்றை ஊழியா்கள் பறிமுதல் செய்தனா்.