கேரளத்துக்கு கடத்த முயன்ற 660 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 660 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கொல்லங்கோடு அருகே காக்கவிளை, திருமன்னம் பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் 30 லிட்டா் கொள்ளளவு கொண்ட 22 கேன்களில் 660 லிட்டா் அரசு மானிய விலை மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது.
தொடா்ந்து, மண்ணெண்ணெய் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸாா், காரை ஓட்டி வந்த கேரள மாநிலம், விழிஞ்ஞம் பகுதியைச் சோ்ந்த சுவாமிதாஸ் மகன் வினிஷை (37) கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement