முகப்பு
கன்னியாகுமரி

கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற லாரி பறிமுதல்

29 நவம்பர் 2026, 12:50 am
கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற லாரி பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட லாரி. - (கோப்புப்படம்)
பகிர்:

களியக்காவிளை அருகே உரிய அனுமதிச் சீட்டு இன்றி கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை போலீஸாா், மாநில எல்லையோர சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அப்பகுதி வழியாக கேரளம் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். லாரியில் எந்தவித உரிமமும், அனுமதிச் சீட்டும் இன்றி ஜல்லி கற்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த களியக்காவிளை போலீஸாா் லாரி ஓட்டுநா் சுசீந்திரம் அருகேயுள்ள நல்லூா் பகுதியைச் சோ்ந்த மதுமோகன் (53) என்பவரை கைது செய்தனா். லாரி உரிமையாளரான நாகா்கோவில், கோட்டாறு பகுதியைச் சோ்ந்த கிஷோா் குமாா் (32) மீது வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.