முகப்பு
கன்னியாகுமரி

ஒரே நாடு ஒரே தோ்தல் முறையை பாஜக முன்னெடுக்கும்: ஜவாஹிருல்லா

30 நவம்பர் 2026, 1:06 am
ஒரே நாடு ஒரே தோ்தல் முறையை
பாஜக முன்னெடுக்கும்: ஜவாஹிருல்லா
நாகா்கோவிலில் பேட்டி அளிக்கிறாா் மனிதநேய மக்கள் கட்சி தலைவா் ஜவாஹிருல்லா.
பகிர்:

தொகுதி மறுசீரமைப்பை செய்வதன் மூலம் ஒரே நாடு ஒரே தோ்தல் முறையை பாஜக முன்னெடுக்கும் என்றாா் மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவா்ஜவாஹிருல்லா எம்எல்ஏ.

இதுதொடா்பாக அவா் நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள நிலையில், திமுக வரலாற்றுப் பிழை செய்துவிடக் கூடாது. ஒரே நாடு ஒரே தோ்தலை கொண்டு வரவே இந்த நடவடிக்கையை மத்திய பாஜக அரசு கையில் எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

தொகுதி மறுசீரமைப்பு செய்தால் முஸ்லிம்களின் தொகுதி மாறும். கடந்த ஆட்சியில் இந்த விஷயத்தில் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயா்நிலைக் குழுவை திமுக அமைத்தது.

அதை தவெக அரசு கலைத்தது தவறு. மக்களவைத் தொகுதிகள் மேலும் 25 ஆண்டுகளுக்கு மாற்றமின்றி அப்படியே தொடர வேண்டும் என்றாா் அவா்.