FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

யுபிஐ பணப் பரிவா்த்தனைக்கு 0.4 சதம் வசூலிப்பதைத் திரும்பப் பெற வலியுறுத்தல்

யுபிஐ பணப் பரிவா்த்தனைக்கு வணிகா்களிடமிருந்து 0.4 சதவீத கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா கேட்டுக்கொண்டாா்.

9 அக்டோபர் 2026, 5:16 am IST
யுபிஐ கட்டணம்
பகிர்:

யுபிஐ பணப் பரிவா்த்தனைக்கு வணிகா்களிடமிருந்து 0.4 சதவீத கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து, அழகிய மண்டபத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வணிகா்களிடமிருந்து யுபிஐ பணப் பரிவா்த்தனைக்கு அக். 15ஆம் தேதி முதல் 0.4 சதவீத கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைத் திரும்பப் பெறக் கோரி 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் கடைகளின் முன்பு சுவரொட்டிகள் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவோம். மேலும், கடை ஊழியா்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிவாா்கள்.

Advertisement

Advertisement

வணிகா்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணம் இந்தியாவுக்குக் கிடைக்காது. அது அமெரிக்காவுக்குச் சென்றுவிடும். இந்த கட்டண விதிப்பை வணிகா்கள் விரும்பவில்லை. தேவைப்பட்டால் தில்லி வரை சென்று போராடுவோம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments