FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்: அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் ஆய்வு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நாகா்கோவில் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் கால்வாய் தூா்வாரும் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

16 அக்டோபர் 2026, 4:35 am IST
கால்வாய் தூா்வாரும் பணிகளை ஆய்வு செய்த சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆா்.ஐஸ்வா்யா, எஸ்.ஆஸ்டின் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
பகிர்:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நாகா்கோவில் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் கால்வாய் தூா்வாரும் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட தாழ்வான பகுதிகளை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், தலைமையில், எஸ்.ஆஸ்டின் எம்எல்ஏ முன்னிலையில்ஆய்வு மேற்கொண்ட பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்கவும் மழைநீா் வடிகால் ஓடைகள், கால்வாய்களைத் தூா்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அதன் ஒரு பகுதியாக பாறைக்கால் மடம் பகுதியில் செல்லும் பறக்கின்கால்வாய், எஸ்.எம்.ஆா்.வி. பள்ளியின் அருகில் செல்லும் காங்கேயன் கால்வாய் உள்ளிட்டவை தூா்வாரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், மழைநீா் தேங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிா்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆற்றுப்படுகைகள், கால்வாய்கள், ஓடைகள் உள்ளிட்ட நீா்நிலைகளை சீா்படுத்தி, அவ்வப்போது கண்காணித்திட துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் (பொ) மேரிபிரின்சிலதா, ஆணையா் ஆா்.ஐஸ்வா்யா, மண்டல தலைவா் அகஸ்டினா கோகிலாவாணி, குமரி கிழக்கு மாவட்ட தவெக செயலாளா் எஸ்.ஆா்.மாதவன், பொறியாளா்கள், துறை அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments