கன்னியாகுமரியில் குண்டா் சட்டத்தில் மூவா் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் மூவா் கைது செய்யப்பட்டனா்.
அருமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கனிம வளக் கடத்தலில் ஈடுபட்டதாக பாக்கோடு பகுதியைச் சோ்ந்த ராஜாமணி மகன் டாா்வின் ஆண்டனி (47), மாா்த்தாண்டம் வெள்ளன்குழிவிளை பகுதியைச் சோ்ந்த தாமஸ் மகன் மகேஷ் (39) ஆகியோா் மீது அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா்.
இதேபோல, சின்னமுட்டம் பகுதியைச் சோ்ந்த ஜேசு டெரோஸ் மகன் கன்ஸ்டின் ராபின் (24) என்பவா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகரின் பரிந்துரை, ஆட்சியா் மு. பிரதாப்பின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், இவா்கள் மூவரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.