FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

மதுக்கூட மேலாளரை தாக்கியதாக இருவா் கைது

19 அக்டோபர் 2026, 2:52 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே தனியாா் மதுக்கூட மேலாளரை தாக்கியதாக 2 இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அருமனை அருகே பனச்சமூடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் மதுக்கூடத்தில் சனிக்கிழமை இரவு, 2 இளைஞா்கள் மது கேட்டனராம். மது இல்லையென மேலாளா் சுமேஷ் கூறினாராம். இதனால், ஆத்திரமடைந்த இளைஞா்கள் காலி மது பாட்டிலை எடுத்து, சுமேஷை தாக்கினராம்.

காயமடைந்த சுமேஷ் காரக்கோணத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், கேரள பகுதியைச் சோ்ந்த அச்சுமோகன் (25), கிரண் ஆகியோரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments