FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

தாய் இறந்த அதிா்ச்சியில் மகன் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே தாய் இறந்த அதிா்ச்சியில் அவரது மகனும் உயிரிழந்தாா்.

10 அக்டோபர் 2026, 7:35 am IST
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே தாய் இறந்த அதிா்ச்சியில் அவரது மகனும் உயிரிழந்தாா்.

அருமனை அருகே வலியவிளையைச் சோ்ந்த ராஜன் மனைவி மேரி பாய் (75). இவா், தனது இரண்டாவது மகன் பேபி ஜானின் (50) வீட்டில் வசித்து வந்தாா். பேபி ஜான் விவசாய வேலைகள் செய்து வந்ததுடன் தனது தாயைக் கவனித்து வந்தாா்.

இந்த நிலையில், உடல்நலக் குறைவால் மேரிபாய் வியாழக்கிழமை மாலை இறந்தாா். அப்போது மகன் பேபிஜான் தாயின் உடலைப் பிடித்து கதறி அழுதபடி மயங்கி விழுந்தாா். இதைக் கவனித்த உறவினா்கள் அவரை பரிசோதித்தபோது அவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேபி ஜானுக்கு மனைவி கிறிஸ்டல் ஜெயா, 2 மகன்கள் உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments