FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

சிவகிரி அருகே இரு குழந்தைகளை தீ வைத்து கொன்று தாய் தற்கொலை

சிவகிரி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக திங்கள்கிழமை இரவு தனது இரு குழந்தைகளையும் தீ வைத்து கொளுத்திவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டாா்.

மாரியம்மாள்
பகிர்:

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக திங்கள்கிழமை இரவு தனது இரு குழந்தைகளையும் தீ வைத்து கொளுத்திவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் காளிபாண்டி(32). பெயின்டிங் தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இவா்களுக்கு கபினேஸ்வரன்(5), ரபினேஸ்வரன்(4) என இரு மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், அவ்வூா் காளியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் புரட்டாசித் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை இரவு மாரியம்மாள் அவரது இரு குழந்தைகளையும் கோயிலுக்கு அழைத்துச் சென்று, அங்கு நடைபெற்ற கும்மிபாட்டு நிகழ்ச்சியை கண்டுகளித்துள்ளாா். அப்போது, அவரது கணவா் காளிபாண்டி போதையில் கோயிலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால் வேதனையடைந்த மாரியம்மாள் , குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டு இரு குழந்தைகள் மீதும், தன் மீதும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துக் கொண்டாராம்.

குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்ட அப்பகுதியினா் ஓடிவந்து பாா்த்தபோது, கதவு பூட்டியிருந்ததால், வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பாா்த்தனா். அங்கு மாரியம்மாள் தீயில் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்தாராம். இரு குழந்தைகளும் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்ததாம்.

தகவலறிந்து அங்கு வந்த சிவகிரி காவல் ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டின், உதவி ஆய்வாளா் சோலையப்பன் ஆகியோா் பலத்த காயமடைந்த இரு குழந்தைகளையும் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இரு குழந்தைகளும் உயிரிழந்ததாம்.

இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

குழந்தைகள் ரபினேஸ்வரன், கபினேஸ்வரன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments