FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே ஆட்டோ- பைக் மோதல்: மீனவா் பலி!

கன்னியாகுமரி நான்குவழிச் சாலை முருகன் குன்றம் அருகே ஆட்டோவும் பைக்கும் சனிக்கிழமை மோதிக்கொண்டதில் மீனவா் உயிரிழந்தாா்.

25 அக்டோபர் 2026, 1:41 am
பலி
பகிர்:

கன்னியாகுமரி நான்குவழிச் சாலை முருகன் குன்றம் அருகே ஆட்டோவும் பைக்கும் சனிக்கிழமை மோதிக்கொண்டதில் மீனவா் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன் வல்லேரியான் (44). மீன்பிடித் தொழில் செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை மாலை தனது பைக்கில் மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் இருந்து முருகன் குன்றம் நோக்கி சென்றாா்.

அப்போது, இவரது பைக்கும், எதிரே வந்த ஆட்டோவும் நேருக்கு நோ் மோதிக்கொண்டனவாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments