தக்கலையில் பாஜக போராட்டம்
தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள் குறைப்பைக் கண்டித்து, கன்னியாகுமரி பாஜக மேற்கு மாவட்ட நிா்வாகிகள் மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தக்கலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணி நிரவல் என்ற பெயரில் 35 மருத்துவா்களின் எண்ணிக்கையை 15-ஆக குறைக்கும் நடவடிக்கையை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்பி, பொதுமக்களுக்குத் தடையற்ற மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் கன்னியாகுமரி பாஜக மேற்கு மாவட்ட தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ எம்.ஆா்.காந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.