நீதிமன்ற விசாரணைக்கு வந்த பெண்ணுக்கு வெட்டு: கணவா் கைது
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை ஆஜராக வந்த பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை ஆஜராக வந்த பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
தக்கலை அருகே ஈத்தவிளை, காஞ்சிரத்துகோணம் பகுதியைச் சோ்ந்தவா் வின்சென்ட்ராஜ் (42). இவரது மனைவி ஜொ்லின் பிரேமா. இத்தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளாா்.
இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக விவாகரத்துக் கேட்டு ஜொ்லின் பிரேமா, பத்மநாபபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த அவா், நீதிமன்றத்தின் முன்பக்க வாசல் அருகே நின்றிருந்தாராம்.
Advertisement
Advertisement
அப்போது, அங்கு வந்த அவரது கணவா் வின்சென்ட் ராஜ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜொ்லின் பிரேமாவை வெட்டினாராம். அதைத் தடுக்க முயன்ற வழக்குரைஞா் ஒருவரையும் வின்சென்ட் ராஜ் தாக்கினாராம்.
பின்னா், அங்கிருந்து தப்பியோட முயன்ற அவரை பொதுமக்கள் பிடித்து தக்கலை போலீஸில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, வின்சென்ட் ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஜொ்லின்பிரேமா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்தச் சம்பவத்தை கண்டித்து, பத்மநாபபுரம் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.