மூதாட்டி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
கன்னியாகுமரியில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 7ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 7ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி, பெருமாள்புரம் அகதிகள் முகாமைச் சோ்ந்த மாயன் மகன் கரண் (36). 2015ஆம் ஆண்டு, 64 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கன்னியாகுமரி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கரணைக் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை நாகா்கோவில் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரித்து, கரணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
Advertisement
Advertisement
இவ்வழக்கில் சிறப்பாகச் செயல்பட்டு, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதில் முக்கியப் பங்காற்றிய நீதிமன்றக் காவலா் வெங்கடேஸ்வரி, நீதிமன்ற விசாரணையை முறையாகக் கண்காணித்த அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் செல்வி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் பாராட்டினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.