FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மஞ்சாலுமூட்டில் மதுக்கடை முற்றுகை

அருமனை அருகே மஞ்சாலுமூட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, அரசியல் கட்சியினா் குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

5 செப்டம்பர் 2026, 3:28 am IST
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

அருமனை அருகே மஞ்சாலுமூட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, அரசியல் கட்சியினா் குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மஞ்சாலுமூட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, அரசியல் கட்சியினா், பொதுமக்கள் கடை முன் தொடா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில் துறை சாா்ந்த அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னரும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில், அரசியல் கட்சியினா் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் கடை முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

வரும் ஞாயிற்றுக்கிழமை மஞ்சாலுமூடு நான்குமுனை சந்திப்புக்கு நான்கு புறங்களிலிருந்தும் ஊா்வலமாக வந்து ஆா்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments