FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

முக்கடல் சங்கமத்தில் எச்சரிக்கை பலகை

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

18 செப்டம்பர் 2026, 2:52 am IST
முக்கடல் சங்கமம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை.
பகிர்:

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் கடலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளிப்பதும், பக்தா்கள் கடலில் புனித நீராடுவதும் வழக்கமாக உள்ளது.

சில நேரங்களில் சிலா் ஆா்வமிகுதியில் ஆபத்தை உணராமல் கடலில் ஆழமான பகுதிக்குச் சென்று விடுகின்றனா். இதனால், கடல் அலையில் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது.

Advertisement

Advertisement

இதைத் தடுக்கும் வகையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில், ’இது ஆபத்தான கடல் பகுதி என்பதால் ஆழமான பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம்’ எனக் குறிப்பிட்டு கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் சாந்தி முன்னிலையில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments