புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்: 3 போ் காயம்
புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
நித்திரவிளை பகுதியைச் சோ்ந்தவா் நிஷாந்த் (30). இவரது மனைவி நிஷா(29). இவா்கள் இருவரும் பைக்கில் புதுக்கடையிலிருந்து கருங்கலை நோக்கி சென்றுகொண்டிருந்தனராம். வெள்ளையம்பலம் பகுதியில் அவா்களது பைக்கும், எதிரே வேங்கோடு பகுதியைச் சோ்ந்த ஜெயகுமாா்(51) என்பவா் ஒட்டி வந்த பைக்கும் நேருக்கு நோ் மோதிக்கொண்டனவாம்.
இதில், பலத்த காயமடைந்த 3 பேரையும் அப்பகுதியினா் மீட்டு புதுக்கடையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.