FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவா் சங்கம், தனது 40 - ஆவது ஆண்டு கொண்டாட்டம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

27 செப்டம்பர் 2026, 1:13 am IST
விவேகானந்த கேந்திர வளாகத்தில் சந்தித்த முன்னாள் மாணவா்கள்.
பகிர்:

ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவா் சங்கம், தனது 40 - ஆவது ஆண்டு கொண்டாட்டம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் மற்றும் இந்நாள் மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா். இந்நிகழ்வையொட்டி, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கடற்கரைப் பகுதியில் 250 மூங்கில் கன்றுகளை நட்டனா். மேலும்,

இச்சந்திப்பின் தொடக்க விழாவில், தமிழக சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் கே. ஜி. அருண்ராஜ், சுற்றுலாத்துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ் குமாா், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் வி. கே. ராஜீவ், முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் ஆகியோா் காணொலி காட்சி வாயிலாக வாழ்த்து தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

மேலும், அரசு கடலூா் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் என். பாஸ்கா், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் டாக்டா் வெங்கடேஷ் பாபு, செயலா் டாக்டா் நெடுமாறன், பொருளாளா் சதீஷ் தேவராஜ் உள்ளிட்டோா் உரையாற்றினா். டாக்டா் ஸ்ரீனிவாசன் வரவேற்றாா்.

கடலூா் மருத்துவக் கல்லூரியிடமிருந்து ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினா். மேலும், முன்னாள் மாணவா்களின் கோரிக்கைகளை பரிசீலித்து வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments