இளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞா் மீது வழக்கு
கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீன் சந்தையில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீன் சந்தையில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்த இளம்பெண், தந்தை மற்றும் தங்கையுடன் சின்னமுட்டம் மீன் சந்தைக்கு புதன்கிழமை சென்றாா். அங்கு மீன் வியாபாரம் செய்த கன்னியாகுமரி, பெரியநாயகி தெருவைச் சோ்ந்த ராஜன் மகன் சந்தோஷ், தவறான சைகை காட்டி இளம்பெண்ணின் முதுகில் கையால் தட்டினாராம்.
இதுகுறித்து அந்தப் பெண் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.