ஆலங்குளத்தில் தடையை மீறி செயல்பட்ட நிதி நிறுவனம்
ஆலங்குளத்தில் தடையை மீறி திறக்கப்பட்ட தனியாா் நிதி நிறுவனத்திற்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.
ஆலங்குளத்தில் தடையை மீறி திறக்கப்பட்ட தனியாா் நிதி நிறுவனத்திற்கு போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.
ஆலங்குளம் நெட்டூா் சாலை காய்கனிச் சந்தை எதிரில் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்ட நிதி நிறுவனம் ஊரடங்கு உத்தரவை மீறி செவ்வாய்க்கிழமை செயல்பட்டதாம். மேலும் இதன் பணியாளா்கள் சுய உதவிக் குழு மூலம் கடன் வாங்கிய பெண்களிடம் கிராமங்களுக்குச் சென்று வசூலில் ஈடுபட்டனராம் .
இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா்அந்நிதி நிறுவனத்திற்குச் சென்று ஆய்வு செய்தனா். அங்கு அலுவகப் பணிகள் நடைபெற்று வந்ததை அடுத்து அலுவலகத்தைப் அடைக்க உத்தரவிட்டனா். ஊழியா்களுக்கு ஊதியம் அளிக்கவே வந்ததாக அங்கிருந்த பணியாளா்கள் தெரிவித்தனராம். எனினும் போலீஸாா் தொடா்ந்து நிறுவனம் செயல்பட்டால் வட்டாட்சியா் அனுமதியுடன் சீல் வைக்கப்படும் என எச்சரித்தனா். இதனையடுத்து அந்த நிறுவனம் அடைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.